Advertisement

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆலோசனை ஹீலர் பாஸ்கர் | advice to boost immunity in tamil | பாகம் 3

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆலோசனை ஹீலர் பாஸ்கர் | advice to boost immunity in tamil | பாகம் 3 நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆலோசனை ஹீலர் பாஸ்கர் | advice to boost immunity in tamil | பாகம் 3 |

243 : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி ? பாகம் 3.

பதில் : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மொத்தம் 100 யோசனைகள் உள்ளது. பத்து பத்து யோசனைகளாக பார்க்கலாம் வாங்க.

பாகம் 1 & 2 ல் 20 யோசனைகளை பார்த்துவிட்டோம். இப்பொழுது 21 முதல் 30 வரை பார்க்கலாம்.

21. கசப்பான மற்றும் துவர்ப்பான உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே பாகற்காய், புதினா, கொத்தமல்லி, கீரைகள், வேப்பம் கொழுந்து, சுண்டைக்காய் போன்ற கசப்பான உணவுகளை தினமும் கொஞ்சமாவது சேர்த்துக்கொள்ளுங்கள்.

22. வேப்ப இலையை உருவினால் ஒரு குச்சி கிடைக்கும். இந்தக் குச்சிக்கு பெயர் வேப்பங்குருத்து. இந்த வேப்பங்குருத்தை சின்ன சின்னதாக கட் செய்து, தண்ணீரில் வைத்து, 15 நிமிடம் சூடு செய்து பின்னர் அந்த தண்ணீரை மட்டும் தினமும் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.

23. வெள்ளைப்பூண்டு ஒரே ஒரு பல் எடுத்து, தோலை நீக்கி, குட்டி குட்டியாக கடுகு போல கட் செய்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் வாயில் போட்டு கடிக்காமல் மெல்லாமல் சிறிது தண்ணீர் ஊற்றி மாத்திரை போல் முழங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

24. கொசுவை கொல்வவதற்காக பயன்படுத்தும் கொசுவர்த்தி சுருள், கொசுவர்த்தி மேட், கரண்டில் பயன்படுத்தும் கொசு விரட்டிகள், மற்றும் உடலில் தடவும் கொசு விரட்டி கிரீம்கள் ஆகியவை பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே இனிமேல் இவை எதையும் பயன்படுத்தாதீர்.

25. இரவு தூங்கும் பொழுது படுக்கையறையில் ஜன்னல், கதவு, வென்டிலேட்டர் ஆகிய அனைத்தையும் மூடிவிட்டு ஒரே காற்றில் தூங்காதீர்கள். வெளிக்காற்று உள்ளே வராமல் உள்க்காற்று வெளியே செல்லாத படுக்கை அறையில் படுத்தால் அனைத்து வியாதிகளும் வரும்.நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

26. கொசுவிடம் இருந்து தப்பிக்க, கொசுவலை பயன்படுத்துங்கள். ஜன்னல் கதவுகளில் கொசு வலையை பயன்படுத்துங்கள். கொசு வலையை பயன்படுத்தினால் கொசுவும் வராது காற்றோட்டமும் இருக்கும்.

27. தூங்கும் பொழுது போர்வையை முகம் முழுவதும் மூடி தூங்கக் கூடாது. எப்படி தூங்கினால் உடலுக்கு தேவையான காற்றோட்டம் கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே போர்வையை கழுத்துவரை போத்த வேண்டும்.

28. குப்புற படுத்து தூங்கினால் நுறையீரல் 20 முதல் 40 சதவீதம் மட்டுமே வேலை செய்யும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே குப்புற படுக்காதீர்கள். மல்லாக்க அல்லது பக்கவாட்டில் படுப்பது சிறந்தது.

29. இரவு தூங்கும் பொழுது மூக்கின் காற்றும் அறையின் காற்றும் உறவாட வேண்டும். மேலும் படுக்கைஅறை காற்றும் வெளிக் காற்றும் உறவாட வேண்டும். இதுதான் காற்றின் தத்துவம். இந்தத் தத்துவத்திற்காக அவரவர் யோசனை செய்து படுக்கை அறையில் ஒரு ஏற்பாடு செய்யுங்கள்.

30. நோய் எதிர்ப்பு சக்திக்கு சுத்தமான காற்றே முக்கிய காரணம். எனவே எப்பொழுதும் நாம் இருக்கும் இடத்தில் தூய்மையான காற்று இருக்கிறதா என்பதை சோதனை செய்து, சரி செய்து கொண்டே இருக்க வேண்டும். வீடு பள்ளிக்கூடம் தொழிற்சாலை ஆகிய அனைத்து இடங்களிலும் அறைகளில் வெண்டிலேஷன் இருக்க வேண்டும்.

காற்றும் மருந்தே.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.

ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களால் நேரடியாக டெலிகிராம் குரூப் இயங்குகிறது நீங்கள் விரும்பினால் இணைந்து கொள்ளுங்கள்
ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்

healer baskar official website :
healer baskar official website :
healer baskar official website :
===========================================================

#healer_baskar #healer_baskar_latest #healer_baskar_latestspeech
#healerbaskar #healerbaskarlatest #healerbaskarlatestspeech
#healerbaskarlatest #healerbaskarspeechintamil #healerbaskarthyroid #healerbaskarweightloss #healerbaskarexercise #healerbaskarsugar #healerbaskar42homemade #healerbaskareyeproblems #healerbaskarsoap
healer baskar ms
==========================================================

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆலோசனை ஹீலர் பாஸ்கர் | advice to boost immunity in tamil | பாகம் 3,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆலோசனை ஹீலர் பாஸ்கர்,advice to boost immunity in tamil,பாகம் 3,

Post a Comment

0 Comments